உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Apr 1, 2011

நெய்தல்

எதுகையும் மோனையும்
உன் எழில் கொஞ்சும் சிரிப்பும்
கைகோர்த்தால் கவிதையடி

பனி காலைப் பொழுதில்
இலையில் பனி துளியில்
உன் முகம் தெரிந்தது

கோடையில் மண்ணில்
இரவில் நடு இரவில்
நடுநிசியில் பனியில்
நதியில் வழியில்
வழியில் பரிசலில்
பரிசலில் முழுமதியில்
கரையில் அருகில்
அருகில் மலையில்
மலையில் மலைகுகையில்
மனதில் விண்ணில்
என் எதிரே உன் விழியில்
வெண்ணிலாவில் மாலையில்
மர நிழலில் (கைகோர்த்து)   உலாவையில்
மழையில் குடையில் நனைகையில்
தனிமையில் உன் சிரிப்பில்
கண்ட அமைதியில் பேரானந்தம் அடி

மங்கை அவள் கை பிடிக்க
மணவாளன் நெஞ்சம் நெகிழ
அவன் கண்ணில் நீர் வழிய
இருவர் உள்ளமும் உருக
சட்டென்று சில்லென்ற மழையில் நனைய
என இருவரின் அறுபதாம் மணநாள் நிகழ்ந்தது!

அய்யோ கடவுளே, இக்கணமே இம்மண்ணிலே மீண்டும் நான் பிறக்கிறேன், அவளுக்கு மகனாக - உடனே என்னை கொன்று விடு (அத்திருகாரியத்தை அவளிடம் விட்டு விடு)

@2088 வீடருகே உள்ள ஓர் பூங்காவிருக்கு வந்தேன்
அங்கே மரங்கள் அமைந்த பாதையில் நடந்தேன்
 மர நிழல் கொண்ட ஓர் திண்ணையில் இளைப்பாறினேன்
சிறிது நேரம் கழித்து சில பூக்கள் என் அருகில் விழுந்தன
மரங்களிடம் கேட்டேன் 'எதற்கென்று?"
"மரங்கள்" அவளின் கல்லறையில் சேர்த்துவிடு?"

ஏக்கங்கள் வந்ததடி ஏனெனில்
உன் மேல் எண்ணங்கள் வந்ததடி

பொய் அவள் விழியினிலே
கள்ளம் அவள் சிரிப்பினிலே
கார்மேகம் அவள் மழையினிலே
நிலவு அவள் நடுநிசியினிலே
கற்பனை கவிஞனின் வரியினிலே
மழலை அவள் உள்ளம்தனிலே
மூதாட்டி அவள் அறிவுதனிலே
மின்னல் அவள் நெற்றியினிலே
தேன் சுவை அவள் நாவினிலே
நேசம் அவள் பேச்சினிலே
வாள் அவள் பார்வையினிலே
என் உள்ளம் அவள் நினைவினிலே
அவள் என் சுவாசம் என் மூச்சினிலே
பொங்குவாள் என் நெஞ்சினிலே
நான் பைத்தியம் அவளை பற்றி எழுதுவதிலே
நேற்று அவள் என் கனவினிலே
இன்று அவள் என் நினைவினிலே
நாளை நாங்கள் கல்லறையிலே

உள்ளங்கையில் உன் முகம் தெரிந்தது
உற்றுப் பார்க்கையில் ஓர் பொழுது கடந்தது

வாணி வந்தாள் வென்று சென்றாள்
விலகிச் செல்கிறாள் வேங்கையில் நான் என்ன செய்யேன்?

மின்னல்கள் சிரிப்பது எப்பொழுது இடியுடன் கூடிய மழை பொழிவது எப்பொழுது

நடுவானில் உன் மீது பொழிந்தாலும்
நட்சத்திரமாய் பொழிவேன் அடி
நாடு கடந்து வந்தே அடி
நறுமுகையே நெஞ்சம் முழுவதும் நீ தான் அடி

என்ன புடிச்சிருக்கா ?
புடிச்சிருந்தா சொல்லு
அன்றைய நாள் காதலிக்கலாம்
மறுநாள் கலியாணம் செஞ்சுக்கலாம்

என்னுள் எங்கிருக்கிறாய் சொல்லிவிடு
எண்ணும் எண்ணமாய் ?
பார்க்கும் பார்வையாய் ?
கேட்கும் ஒலியாய் ?
உண்ணும் உணவாய்?
சுவாசிக்கும் மூச்சாய் ?
எழுதும் கவிதையாய் ?
மனதில் மகிழ்ச்சியாய் ?
இதய துடிதுடிப்பாய் ?
வழிபடும் கடவுளாய் ?
பேசும் செந்தமிழாய் ?
நாம் கொஞ்சும் குழந்தையாய் ?
குருதியில் தாய்ப்பாலாய் ?
வாழ்வில் வாழ்வாய் ?

வெண்ணிலா மேக படி இறங்கி பூமியில் சென்றது
(on seeing in the side mirror of the bus while she got down)

உன் கன்னக்குழியில் என் கண்களை வைத்தேன்
உன் இமைகளில் என் இதயத்தை வைத்தேன்

உன்னிடம் நீ போராட வேண்டும் என்றால் காதலித்துப்பார்

உனை காண கண்களை படைத்தவன்
எதற்க்காக இதயத்தை படைத்தான் ?

நீ அடித்தால் மறு கன்னத்தையும் காண்பிப்பேன்

நிலவில் ஒளி படைத்தவன் உன் மனதில் ஈரம் வைத்தானோ ?

நீராய் வந்தாய்
நெருப்பாய் வந்தாய்
நறுமுகையாய் வந்தாய்
நடுநிசியில் வந்தாய்
நெற்கதிராய்  வந்தாய்
நித்திரையாய் வந்தாய்
நிறைமனதாய்  வந்தாய்
நாணமாய் வந்தாய்
நாதமாய் வந்தாய்
நவமணியாய் வந்தாய்
நிகரேது என வந்தாய்
நட்சத்திரங்களாய் வந்தாய்
நிலவாக வந்தாய்
நிழலாக வந்தாய்
நெஞ்சத்தில் வந்தாய்
நீளமேகமாய் வந்தாய்
நீளதாமரையாய் கையில் வந்தாய்
நிம்மதியாய் வந்தாய்
நினைவாய் வந்தாய்
நெற்றிகண்ணாய் வந்தாய்
நெருங்கி எப்போது வருவாய் ?

உன் முகம் காணாமல் உறைந்தேன் அடி
உன் நிழல் கண்டு நின்றேன் அடி
என் நினைவில் வந்தாய் அடி
நிழலாய் கலந்தாய் அடி
என் அருகே நெருங்கி வாடி
என்னை உன் நினைவில் கொள்ளடி

என்ன நினைத்தேனோ
ஏது நினைத்தேனோ
எண்ணங்கள் ஏதும் புரியவில்லை

இரு விழிகள் ஒர் பார்வைக்கு
இரு மனம் ஒர் வாழ்க்கைக்கு

நீ சிரித்தால் கொள்ளை அழகு
வாய் விட்டு சிரித்தால் உயிர் கொல்லும் அழகு

உன் மௌனம் சுந்தர கவிதை சுறக்கும் உற்று

நின்னை கண்டு நாணம் செவ்வானத்தை தண்டித்து

கையில் ஏந்தி மலையேறி உனை எட்டி பார்க்கிறேன் மானே
எங்கு மறைந்து கொண்டாய்
(on sunrise)

இன்று உன் அருகில் உன் மூச்சு காற்றை சுவாசித்த போது முதன் முதலாய் தாய்ப்பால் அருந்திய பரவசம் உணர்ந்தேன்

கண் விழித்துகொண்டிருந்த பொழுது விழியில் மறைந்து கொண்டாய் ?
கண் மூடி கொண்டு உறங்குகிறேன் உறக்கம் வரவில்லை
என்ன செய்ய போகிறாய் என அறியமுடியவில்லை
நீ செய்யும் மாயைகள் எத்தனை கோடி இன்பம்
கண் விழிக்க ஆசை இல்லை பொன்னமா

கலவரம் உண்டு
கானல் உண்டு
களிப்பு உண்டு
களவு உண்டு
கோவம் உண்டு
கண்ணியம் உண்டு
கோர்வை உண்டு
கசப்பு உண்டு
கற்க உண்டு
காத்தல் உண்டு
காலம் உண்டு
காத்திருப்பு உண்டு
கடமை உண்டு
கட்டுப்பாடு உண்டு
கனவு உண்டு
கற்பனை உண்டு
கவிதை உண்டு
இவை யாவும் காதலில் உண்டு

மின்னலினில் உன் முகம் எப்படி தெரியும். நீ முக கண்ணாடி பார்ப்பாயோ ?

உன் நினைவு வருகையில் நித்திரை இழந்தேனடி
உன் அருகில் வருகையில் உள்ளம் குளிருதடி
உன் கண் நோக்கினால் கள்வெறி கொண்டேனடி
நீ என் பெயர் உச்சரிக்கையில் நினைவிழந்தேனடி

தனியாய் உனது பீம்மமாய்
ஒரு துளியாய்
உன் இலையில் இருப்பேன் தாமரையே