உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

May 31, 2011

May 2011

நினைக்காமல் இருக்க முடியவில்லை
நெஞ்சம் உன்னைக் கொண்டாடாமல் இருக்க முடியவில்லை
நா உன்னைப்  பற்றிப் பேசாமல் இருக்க முடியவில்லை


தேனாய்த் தவழ்பவளே
தீயாய்ச் சுவைக்கிறாய்
நிலவாய் வந்தவளே
நிழலாய் ஓடுகிறாய்
தென்றலாய் வீசியவளே
புயலாய்க் கடக்கிறாய்
காதல் என்ற போது
நட்பாய்ப் பழகினேன் என்றால்
கசப்பாய் உள்ளது
ஆனால மனம் வெறுப்பாயில்லை
அன்பாய் உள்ளது
நட்சத்திரங்களை  வேடிக்கை காண வெண்ணிலாவில் குடி கொள்வோம்
சிகரங்களின் அழகறிய இமயத்தின் சிகரத்தில்(உச்சியில்) குடி கொள்வோம்
பூவின் மணம் அறிய மொட்டுக்குள் குடி கொள்வோம்


உன் அன்பை அறிய மனதில் எனக்கோர்  இடம் கொடுத்துவிடு
விதி வெல்லும் முன் உன் விழி வென்றது


நீ அழகாய் இருக்கிறாய்


துளித் துளியாய்த் தூறல் விழுந்தாலும் தூறல் அழகு தான்
துவண்டுத் துவண்டுத் தூங்கி வழிந்தாலும் தூக்கம் அழகு தான்
விழித்தவுடன் உன் சோம்பல் அழகு தான்
வெட்கப்பட்டுச் சோம்பலை மூடிக் கொள்வதும் அழகு தான்
இவையனைத்தையும்  உன் அருகே ரசித்தவன் ராஜேஷ்
என் அருகில் இருந்து மாயம் செய்தவளே

தொலைவில் இருந்து தொல்லை தருகிறாய்
விழியில் இருந்து விந்தை செய்கிறாய்
விரல் கோர்க்க வா


என் கை விரல் பிடித்து உன்னைப் பற்றிக்
கவிதை எழுதிக் கொள்கிறாய்
காரணம் என்ன பெண்ணே
நீ என்ன அழகாய் இருக்கிறாயோ?
எனக்கொன்றும் என்றும்  அப்படித் தோன்றவில்லை


முதல் மழைத்துளி என்மேல் சிந்துமோ
முதல் எழும் அலை மடியாமல் என் கால்களைத் தொடுமோ
மழலையின்  முதன் முதல் அடி என் மார்பில் விழுமோ  (நடக்குமோ)
அதிகாலை உன் முதல் பார்வை என்மேல் விழுமோ
உன் மௌனம் என்னிடம் பேசுமோ


உன்னைப் பற்றி என்ன சொல்வது ?
ஒரு பொழுதும் நினைக்காமல் இல்லை என்று சொல்லவா ?


எது உற்சாகம் உச்சி வெயிலில் குச்சி ஐஸ்-ஆ?
அல்லது உன் புன்னகையோ ?


ஒவ்வொரு பெண்ணைப் பார்க்கும் பொழுதும்
உன் முகம் தோன்றுகிறது


மரணம் என்பது முடிவல்ல முழுமை


தோழமை (தலைகள்) தாங்க தோள்கள் காத்திரு
காலங்கள் கடக்க கால்கள் காத்திரு
காவியம் படைக்க கை விரல்கள் காத்திரு
காதல் புரிய கண்கள் காத்திரு


அவளுக்கு அமலாவைப்  பிடிக்கும்
அமலாவை எனக்கும் பிடிக்கும்
அவளை எனக்குப் பிடிக்கும்
அவளுக்குப் பிடிக்கும் என்பதால்
அமலாவை இன்னும் அதிகமாய்ப் பிடிக்கும், எனக்கு


அர்த்தமில்லா எழுத்துக்கள் சேர்ந்து அர்த்தமுள்ள வார்த்தை தரும்
நாம் ஒன்று கூடி வையகத்திற்குப்  / வாழ்க்கைக்குப்
புது அர்த்தம் தருவோமா?


கல்லறையில் வந்து கடிதங்கள் படிக்கவேண்டாம் கண்மணியே
கண்முன்னே வந்துவிடு காதோடு பேசிவிடு
தினம் தினம் உன் பெயரை ஜிசாட்டில் காண்பதே ஆனந்தம்
உன்னுடன் நாளும் பழகுவது பேரானந்தம்


இரவு பொழிந்தாலும் உறக்கம் பொழிவதில்லை
கற்பனைகள் பொழிந்தாலும் காதல் நீ பொழிவதில்லை
நினைவுகள் பொழிந்தாலும் நிந்தன் நெஞ்சம் பொழிவதில்லை
மௌனம் பொழியும் பெண்ணே என் மீது சொற்கள் பொழிந்துவிடு


நிலவு:
உன்னைக் காண ஆயிரம் நிலவுகள் வந்ததடி
எனக்காக மற்றவையாவும் விண்ணில் இருந்து மறைந்ததடி

நான் தற்கொலை செய்து கொள்வதை நீ ரசிப்பாய் என்றால் நீர்வீழ்ச்சியாய் வீழ்வேன்

அருவியின் கூற்று:
தரையில் வீழ்ந்து சிதறினாலும் என் காதல் ஆறு போல் நீண்டு உன்னிடம் சேரும்


 என் அன்பு மழைத்துளி  அல்ல விதை.
 மரமாய் வளர்ந்து பூக்கள் மலரும்.
 ஆனால் சூரியனாய் நாளும்
 என்னைக் காண நீ வரவேண்டும்