உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Nov 30, 2011

Oct Nov 2011

கம்மல் தூலியில் கண் அசைத்து உரங்கி விளையாட இடம் கொடு


உன்னை காதலிப்பேன் என்று நினைக்கவில்லை
உன்னை ஏன் காதலிக்கிறேன் என்று தெரியவில்லை
உன்னால தான் காதல் புரிந்ததுனு சொல்ல மாட்டேன்
முன்பே எனக்கு காதல் புரிந்த ஒன்று தான்
உணர்ந்தது உன்னுடன் மட்டும் தான்


உன் முகம் போல் வேற் யார் முகமும் பசுமையாய் என் நினைவில் இல்லை


இதய தாமரையில் இனியவள் நீ வந்து அமர்ந்தாய்
இந்திரனும் அல்ல சுந்தரனும் அல்ல
எனினும் என் கரம் பிடிப்பாயோ


யாரோ ஒருவன்
யாரோ ஒருத்தியை
கற்பனை செய்து எழுதுகிறான்
அதை இசையமைக்கிறான்
யாரோ ஒருவன்
அதனை பாடுகிறான்
யாரோ ஒருவன்
அதை வேற் ஒருத்தியுடன்
மற்றொருவன் நடிக்கிறான்
அதை ரசிக்கிறான்
யாரோ ஒருவன்
இப்படி இல்லாமல்
உன்னை பற்றி ரசித்து
கவிதை எழுதும் காதலனாய்
என்னை மாற்றிய உன்னை
நினைக்காத நாள் இல்லை சகியே
என் ஷ்வேதமே


உன்னை பற்றி என்னிடம் பேசும் போது
சிதறிய சொற்களை கோர்த்தேன்
கவிதை என்கிறார்கள்
நீ பேசும் வார்த்தைகளை எப்படி சொல்வார்களோ


அவளை சந்திப்போமா என
அவளை தேடுகிறது கண்கள்
(@Forum Mall)


உடைந்த கண்ணாடியை  ஓட்ட வைக்க இயலாது
உடைந்த என் மனதை ஓட்ட வைக்க
உன்னால் மட்டும் முடியும்


உன் கண்ணில் காணாத கவிதை உண்டோ
உன் மனதில் காணாத காட்சி உண்டோ
என்னில் காணாத காதல் உண்டோ
       இனி நீ தாமதம் செய்ய காரணம் உண்டோ


அவஸ்தை என்பது அழகு


பெண்ணே! பரவசம் என்பது உன் பேச்சு
அதனை அள்ளி அள்ளி வழங்கு
பருக காத்திருக்கேன்


உனக்காக காத்திருந்த காலங்களை கவிதை எழுதியாச்சு
உன்னுடன் வாழும் நாட்களில் அதை பாடுவோம்


அவள் இரு கரம்
ஒரு விழி மறைத்தபின்
மறு விழி  கண்டேன்
அக்காட்சி உலக அழகு


என்னுடன் தீபாவளி இல்லையெனில்
எப்படி கொண்டாடுவேன் ??

பார்வை போதும் பயணம் பாவை உன்னுடன் என சொல்ல


அழகி நீ பேரழகு
பிள்ளை அழகு
கொள்ளை அழகு
சிலை அழகு
நிலை அழகு
விரல் அழகு
குழல் அழகு
அழகு என்று சொல்வதருக்கு
இடம் இல்லாமல் அழகு
நீ எனக்கு


உன் வளையல் உடைந்து கீரினாலும் வலிக்காது
உனை பிரிந்து யாசித்தாலும் ஆனந்தம் போதாது
நீ என்னுடன் வேண்டும்


உனை பற்றி எழுதுகையில் என் தட்டச்சும் ஓசை கொடுக்கவில்லை


நேற்று அவளை கண்டதில்
மனம் நாணம் கொண்டதில்
கண்கள் ஆனந்தம் கொண்டதில்
நேற்றை மறந்தேன்
இன்று உயிர் திரும்பினேன்
கனவை களைக்கிறேன்
புன்னகை புரிந்தேன்
கன்னத்தில் இரண்டு குழியடி
உன்னிடம் இருந்து திருடியதில் ஒன்று


கனவில் கொஞ்சும்
சலங்கை சத்தம்
செவிகள் கெஞ்சும்


உன் கரங்களில் படுத்து
உன் கைகளால் என் தலை பிடித்துக்கொண்டு
உன் மூக்கினால் உரசி எனை கொஞ்சும் போது
நான் படும் அவஸ்தை
சொல்லி மாளாது
சொன்னால் புரியாது
சொல்ல வார்த்தை நீ தரவில்லை
குழந்தை நான் புரிந்துக்கொள்


சிறப்பானது காதல்
சற்று சிந்தித்து பார்
சில நாள் வாழ்ந்து பார்
என்னுடன் சேர்ந்து பார்
மலராய் உணர்வாய்
சிறப்பானது காதல்