உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Jan 17, 2013

September 2012 January 2013

பன்னிரண்டு கண்ணாடி பேருந்தில் முப்பது பேர் இருந்தும் தனிமை தனிமையோ


மலர் தனை ரசிக்க யாரிடம் என்று கற்று கொண்டாயோ மனமே இப்பொழுது  எங்கு உள்ளாயோ

- மலர் தனை  ரசிக்க  கற்றுகொண்டோரிடம் என்னை பற்றி நினைவு கூர்வாய் மனமே


பார்க்காத நாட்கள் பார்வை யற்றவை
பேசாத நாட்கள் சுவை யற்றவை
நினைக்காத நாட்கள் உயிர் யற்றவை
நீ இல்லாத வாழ்க்கை பொருள் அற்றவை


சாலை செல்லும் பாதை மழை
நீ செல்லும் பாதை நான்


நுரையிரல் தாண்டிய உன் சுவாசம்
என் நெஞ்சம் தனை தாண்டவில்லை


உன்னை பற்றி பேச ஒரு போதும் உதடுகள் நிற்கவில்லை
உள்ளங்கள் பேச தடைவிதித்தது ஏனோ ?
கண்கள் காணமுடியாமல் செய்தது ஏனோ ?


மழை பேய்த போது மண்வாசம் நுரையிரளுக்கு சென்றது
உன் வாசம் என் மனதிற்கு சென்றது


மங்கையே உன் நினைவுகள் மர இலைகளில் இருந்து சிந்தும் தூத்தல் போல் சிலிர்க்கிறது


நான் வரைந்த வெண்ணிலா ஷ்வேதாம்பரம்


மலரே அவள் சுவாசம் உன் வாசமோ
என்னை மயக்குகிறது
மயங்குகிறேன்
எங்கு இருக்கிறாள் அவள்


கவிதை ஒன்று சொல்
என் காதில் மட்டும் சொல்
கற்பனையிலும் காணாதவற்றை சொல்
கமலமே உன் சிரிபோலியுடன் சொல்
என்னை சிதரவைக்கும் செந்தமிழ்ச் சொல்லைச் சொல்


உனக்காக நான் வாங்கிய பூக்கள்
என்னுடன் வாடுகின்றன
பூக்களை வாடவிடாதெ


என் இதயதை உன் இதயத்துடன் இணைக்க வைத்தியரை வரச்சொல்லவா ?
அந்த சிகிச்சை எனக்கு ஆனந்த சிகிச்சை ஷ்வேதா ?


மெல்லிய தூறல் முள்ளாய் தீண்டியதே
நீ அருகில் இல்லாத பொழுது


ஒரு மாதம் பிறகும் பௌர்ணமி ஒரு நாள் தான்
ஒரு கணம் உன்னுடன் ஆயினும் வாழ்வெங்கும் ஒளிவெள்ளம்


நீ பார்க்காத என் இதயம் இருந்தும் பயன் என்னடி


இரு கண் கொண்ட நிலவே
இருதயம் கொள்ளாதது ஏனோ
இரு ஆண்டு இசைக்காதது ஏனோ
ஈகை செய்துவிடு
இரு மனம் சேர்த்துவிடு
என்னுடன் திருமணம் புரிந்துவிடு


இரு கண் கொண்ட நிலவே
இதுவரை என்னை காணமல்
கொல்வது  யேனோ

கடவுளாய் வந்து காட்சி தந்தருள்வாய்
மனைவியாய் வந்து மாணிக்க வாழ்க்கையருள்வாய்
மழலையாய் வந்து அப்பா என்றழைப்பாய்யோ


கொஞ்சி கொஞ்சி பார்க்க வேண்டிய உன்னை
நான் அஞ்சி அஞ்சி பார்க்கிறேன்


உன் பெயரை  கண்டால் நான் படும் கொண்டாட்டம்
உன்னை காணாமல் நான் படும் திண்டாட்டம்
உனக்கு தெரியுமா ஷ்வேதா ?


ஒரு விழி கொல்லுதே
அதே இடத்தில
இரு விழி புதைக்குதே


உன்னோடு வாழாத வாழ்க்கை வேறும் கடலில் வசிப்பது உள்ளது