உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

May 31, 2013

Feb 2013 May 2013

இன்று கனவில் வந்தாய் எழுந்தேன்
நாளை வாழ்வில் வந்தால் வசப்படுவேன்.
வருவாயோ


​மழையாய் உயிர் தந்து
வெயிலாய் இதம் தந்து
என்னை பனியாய் கொன்றவளே
மழையாய் மறுபடியும்  பெய்யாயோ
              - செடி

​ஓடும் மேகம் நீயோ
அதனை தள்ளும்
காற்று நானோ ?

மூளையும் பயிர் நானோ
சிந்தும் மழை நீயோ

சங்க தமிழ் நீயோ
செம்பணி புலவர் நானோ

வானம் நீயோ
விண்ணோடு பேசும்
மைனா நானோ

நந்தவன பூக்கள் நீயோ
உம்மை சிறிது நேரம் சுமக்கும்
பூக்கூடை நானோ

மலைப்ரதேசம் நானோ
என்மேல் உறைந்து ஓய்வெடுக்கும்
மேககூட்டம் நீயோ
இதனை காண்பார் யாவரும்
நம்மை அழகு என்பார்
ஏன் இது உனக்கு புரியவில்லையா ?


அப்படி எதுக்கு உன்னை காதலிச்சேன்
இப்படி உன்ன பத்தி சிந்திப்பதற்கு
என்ன பாத்து ஒரு நொடி
நீ சிரிச்சா போதும்
ஒரு வாரம் முழுக்க
அதை நெனெச்சு இருப்பேன்
இரவுல கனவுல நீ வந்தா போதும்
அடுத்த இரண்டு நாள்
முக பிரகாசமா சிரிச்சின்னு இருப்பேன்
உன்னோடு இல்லாம நான்
எதுக்கு இந்த வாழ்க்கைய
அர்த்தமற்று வாழறன்
வித விதமா ஜிமிக்கி போட்டு
காலுக்கு வெள்ளி கொலுசு போட்டு
தல நிறைய பூ வெச்சு
நீ ஒம்போது கஜ மடிசார் கட்டி
நான் மயில் கண் வேஷ்டி கட்டி
பாலும் பழமும் உண்டு
பாவைகள் பாடல் பாட
ஊஞ்சலிலே நாம் ஆட
கெட்டி மேளம் இடி முழங்க
அட்சதை மழை பொழிய
கல்யாணம் பண்ணிக்கலாம் வெண்கமலமே
காலப்போக்கில் நம்
முக சுருக்கத்தில்
மெல்லிய அழகு கண்டு
கண்விழி வழி காதல் மாறி
புன்னகை பூமலரில்
காதல் செய்வோம்
பவழமல்லி பூத்துருச்சு
மல காத்து வீசிரிச்சு
மழைமேகம் கொட்டிரிச்சு
மழை பெஞ்ச மண்வாசம் அமிங்கிரிச்சு
ராசா ஏக்கம் குறையலையே
ஆனா மங்கை மனம் மாறலையே